விபின் தாஸ், குருவாயூர் அம்பலநடையில் போஸ்டர்.  
செய்திகள்

குருவாயூர் அம்பலநடையில் இயக்குநருடன் மீண்டும் இணையும் பிருத்விராஜ்!

இயக்குநர் விபின் தாஸுடன் நடிகர் பிருத்விராஜ் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்.

DIN

மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விபின் தாஸ்.

நடிகர் பிருத்விராஜ், நிகிலா விமல், பாசில் ஜோசப், யோகி பாபு ஆகியோரை வைத்து குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தினை இயக்கினார்.

குருவாயூர் அம்பலநடையில் போஸ்டர்.

இந்தாண்டு வெளியான இந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் வெளியான வாழ திரைப்படத்துக்கும் விபின் தாஸ் கதை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து படம் எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் அசத்தலாக நடித்திருந்தார். கேரள மாநில விருதில் பல விருதுகளை இந்தப் படம் வாங்கிக் குவித்தது. தற்போது கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிருத்விராஜ்.

நேர்காணலில் இயக்குநர் விபின் தாஸ் பேசியதாவது:

நடிகர் பிருத்விராஜுக்கு எனது படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார். குருவாயூர் அம்பலநடையில் போன்ற கமர்ஷியல் படங்களில் அல்லாமல் இன்னும் நம்பகத்தன்மையிலான படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனது அடுத்த படத்தில் புதிய நடிகர்கள் நடிகைகளை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளேன். பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இல்லாமல் கதாபாத்திரம் வழியாக கதையை நகர்த்தும் நுணுக்கமான ஒரு படமாக இது இருக்கும் என்றார்.

இதற்கடுத்து ஃபகத் ஃபாசில், எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படம் இயக்க உள்ளதாகவும் விபின் தாஸ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT