செய்திகள்

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டீசர்!

நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. விஜய்யுடன் நடித்த லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வருகிறார். தற்போது கமல் (தக் லைஃப்), அஜித் (விடா முயற்சி) படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் உடன் இணைந்து ஐடென்டிடி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அகில் பால் - அனாஸ் கான் எழுதி இயக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ கோகுல மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT