பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் புதுமையான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக போட்டியாளர்களுக்கு திரைப்படம் திரையிடப்பட்டது. வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு 100 நாள்களுக்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு, புதிதாக வெளியான படம் திரையிடப்பட்டதால், போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சச்சரவு வாரம்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் முழுக்க ஏஞ்சல்களும் டெவில்களும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் போட்டியாளர்களிடையே கடும் சச்சரவு நிலவியது.
டெவில்களாக இருப்பவர்கள் ஏஞ்சல்களாக இருப்பவர்களை கடுமையாக தொந்தரவு செய்தனர். இதில், ஏஞ்சல்களாக இருப்பவர்கள் தாக்குபிடித்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இப்போட்டியில் ஏஞ்சல்கள் பொறுமையிழந்தால் டெவில்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு ஒரு இதயமும் வழங்கப்படும். இவ்வாறு அதிக இதயங்களைப் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
முதல் நாளில் ஏஞ்சல்களாக இருந்தவர்கள் மறுநாள் டெவில்களாகவும், டெவில்களாக இருந்தவர்கள் ஏஞ்சல்களாகவும் மாற வேண்டும். இதனால் சுவாரசியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முதல் நாளை விட இரண்டாவதுநாள் சுவாரசியம் குறைந்ததாகவே இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் படம்
இந்நிலையில், போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சம்பவம் நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவருக்கும் சமீபத்தில் வெளியான திரைப்படம் திரையிடப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அமரன் திரைப்படம் பிக் பாஸ் வீட்டில் திரையிடப்பட்டது. இரவுக் காட்சியாக, நொறுக்குத் தீனிகளுடன் திரையிடப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரமோஷன் செய்யப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போதுதான், அமரன் திரைப்படம் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கமல் அறிவித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய படம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களுக்கு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.