முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி படத்திற்கு புதிய சிக்கல்?

Updated On : 9 டிசம்பர், 2024 at 11:20 AM
பகிர்:


நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் புதிய சிக்கலைச் சந்தித்துள்ளது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல்போல் தெரிந்தது.

இந்த நிலையில், பிரேக்டவுன் படத்தின் விநியோக உரிமையை வைத்திருக்கும் பாரமௌண்ட் பிக்சர்ஸ் (paramount pictures) நிறுவனம் ரீமேக் உரிமைக்காக லைகாவிடம் ரூ. 150 கோடி வரை கேட்டுள்ளனராம். இதனால், படக்குழு அதிர்ச்சி இருப்பதாகக் கூறப்படுகிறது.

விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த கதை விவாகரம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →