செய்திகள்

சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி பொய்யான தகவல்கள் குறித்து எச்சரித்துள்ளார்...

DIN

தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நடிகை சாய் பல்லவி எச்சரித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து தனக்கென நல்ல வணிகத்தை உருவாக்கினார்.

முக்கியமாக, ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் விராத பர்வம் படங்களில் தன் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார். இயக்குநர் மணிரத்னம் தனக்குப் பிடித்த நாயகி என பேசும் அளவிற்கு கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இறுதியாக, இவர் நடித்த அமரன் திரைப்படம் இந்தியளவில் கவனிக்கப்பட்டதுடன் ரூ. 300 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கலங்கடித்தார் சாய் பல்லவி.

அடுத்ததாக, மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ’ராமாயணா’ படத்தில் சீதாவாக நடிக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் இராவணனாகவும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல சினிமா இணைய இதழ் ஒன்று, “சாய் பல்லவி ராமாயணா படத்தில் சீதாவாக நடிப்பதால் அசைவம் சாப்பிடுக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். படப்பிடிப்பு முடியும்வரை உணவகங்களில் சாப்பிடாமல் எங்கு சென்றாலும் இவர் அழைத்துச் செல்லும் சமையல்காரர்கள் சமைக்கும் சைவ உணவையே சாப்பிடுகிறார்” எனத் தெரிவித்திருந்தது.

இதைப் பகிர்ந்த சாய் பல்லவி, “நோக்கத்துடனோ அல்லது நோக்கமில்லாமலோ (கடவுள் அறிவார்) கூறப்படும் ஆதாரமற்ற புரளிகளுக்கும், பொய்களுக்கும், தவறான கூற்றுகளுக்கும் நான் எப்போதும் அமைதியாகவே இருந்திருக்கிறேன். ஆனால், இது தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் இப்போது எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. இனிமேல் என்னைப் பற்றிய கட்டுக் கதைகளை, புரளிகளை எந்தவொரு ஊடகமோ, தனிநபரோ பரப்பினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் இக்கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT