செய்திகள்

லாபதா லேடீஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

லாபதா லேடீஸ் குறித்து...

DIN

லாபதா லேடீஸ் திரைப்படம் ஈட்டிய வருவாய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா, நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெண் கல்வி, பெண் சுதந்திரத்தை மையமாக வைத்து உருவான இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியான பின் இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது.

படத்திற்குக் கிடைத்த வரவேற்பால், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சுற்றுக்கான தேர்விலிருந்து படம் வெளியேறியது.

இந்த நிலையில், ஆச்சரியப்படுத்தும் தகவல் ஒன்று கிடைத்ததுள்ளது. லாபதா லேடீஸ் திரைப்படத்தை ரூ. 10 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் ரூ. 80 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாம்.

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் நெட்பிளிக்ஸில் ரூ. 180 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT