சிவக்குமார், சூர்யாவுடன் பாலா. 
செய்திகள்

ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன்: பாலா

இயக்குநர் பாலா நடிகர்கள் ரஜினி, கமல் குறித்து பேசியுள்ளார்..

DIN

நடிகர் சிவக்குமாரின் கேள்விக்கு இயக்குநர் பாலா சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வு கடந்த டிச. 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் விடியோ ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது, நிகழ்வில் பேசியவர்கள் மற்றும் பாலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என ஒவ்வொரு விடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி, நடிகர் சிவக்குமார் பாலாவிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். குறிப்பாக, ‘சிறுவயதில் உங்களைத் தத்துக் கொடுத்தபின் அம்மாவிடம் வளராதது கஷ்டமாக இருந்ததா?’ எனக் கேட்டதற்கு, ‘ஆமாம். அதனால், சிறு வயதிலேயே மனரீதியாக பாதிப்படைந்தேன்’ என்றார்.

மேலும், ”சினிமாவில் நடிகைகள் யாராவது உங்களைக் காதலித்தார்களா?” என்கிற கேள்விக்கு, “இரண்டு, மூன்று பேர் இருந்தார்கள். இப்போது, அவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதால் பெயரைச் சொல்லமாட்டேன்” என நகைச்சுவையாகப் பதிலளித்தார் பாலா.

முக்கியமாக, ‘நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் உங்களிடம் வந்தால் படம் இயக்குவீர்களா” என சிவக்குமார் கேட்டார். அதற்கு பாலா, “வாய்ப்பு இல்லை. அவர்கள் பாதை வேறு. என் பாதை வேறு” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT