செய்திகள்

தி ஃபேமிலி மேன் - 3 படப்பிடிப்பு நிறைவு!

ஃபேமிலி மேன் - 3 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது..

DIN

ஃபேமிலி மேன் - 3 இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பால் தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவானது. இதுவும் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்றது.

ஆனால், இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்ததற்காக சில சர்ச்சைகள் எழுந்தன. தமிழகத்தில் இந்த சீசனை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஒளிபரப்பக் கூடாது என்றும் பலர் போராட்டங்களை நடத்தினர். 

சில மாதங்களுக்கு முன், சீசன் - 3 தொடருக்கான படப்பிடிப்பை துவங்கினர். இந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசனுக்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT