முகப்பு
செய்திகள்

பாரத ரத்னகுமார் விருது! வடக்குப்பட்டி ராமசாமி சென்சார் வார்த்தைகள் என்னென்ன?

நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:39 PM
பகிர்:

சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நாளை (பிப். 2) வெளியாகிறது.  இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதில், நீக்கப்பட வேண்டிய வார்த்தைகளை தணிக்கை வாரியம் படக்குழுவுக்குக் கூறியிருக்கிறது. அதில், ‘மயிருல, பன்னிமூக்கா, பரங்கித் தலையன், ஒல்ட் மங்க், பாரத ரத்னகுமார் அவார்ட் மற்றும் ஒரு கெட்ட வார்த்தை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், ‘முக்கியமான சாமியைக் கூட காசு இருந்தால்தான் பாக்க முடியுது’ என்கிற வசனத்தையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.

சந்தானம் இதுவரை நாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக திரைகளில் வெளியாக உள்ளது. உலகளவில் 600 திரைகளாம்! 

முழு கட்டுரையைப் படிக்க →