செய்திகள்

நடிகை பூனம் பாண்டே உயிருடன்தான் இருக்கிறார்

DIN

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32), கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நேற்று செய்திகள் வெளியானநிலையில், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் விடியோவும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், நான் உயிருடன் இருக்கிறேன். நான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது என்பதால் இதைச் செய்ததாகவும்” அவர் இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார்.

நேற்று தினமணியில் வெளியான செய்தி.. காலமானார் நடிகை பூனம் பாண்டே!

"எனது இறப்புச் செய்தி அறிந்து கண்ணீர் சிந்தியவர்களுக்காக நான் வருந்துகிறேன், நான் காயப்படுத்தியவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனது நோக்கம்: நாம் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி அதிர்ச்சிகொடுத்து பேசவைப்பதே - அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்," என்று அவர் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘நஷா’ திரைப்படம் மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான மாடல் பூனம் பாண்டே, அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாா்.

சமூக ஊடக பக்கங்களில் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவாறு வலம் வருபவராக மக்களிடையே பிரபலமடைந்தவா் பூனம் பாண்டே.

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட பதிவில், பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், என்னை கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் பலிகொள்ளவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான பெண்களை அது பலிகொள்கிறது. இந்த நோயை முற்றிலும் வராமல் தடுக்கவும், வந்தாலும் சிகிச்சை பெற்று குணமடையவும் முடியும். எச்பிவி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மற்றும் தொடர் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தடுக்கவும், முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைபெறவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார் பூனம் பாண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT