செய்திகள்

விடுமுறையை கொண்டாடும் பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அவர்களது விடுமுறை கொண்டாடி வருகின்றனர்.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அவர்களது விடுமுறை கொண்டாடி வருகின்றனர்.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்களது விடுமுறையை கொண்டாடுவதற்கு வெளிநாடுகளுக்கும், வெளி ஊர்களுக்கும் சென்றுள்ளனர்.

அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் அர்ச்சனா கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். நடிகை மாயா கிருஷ்ணன் தாய்லாந்திற்கும், பூர்ணிமா  வயநாட்டிற்கும் சென்றுள்ளனர்.

மூன்று பேரும் அவர்களது இண்டாகிராம் பக்கத்தில் அவர்கள் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT