செய்திகள்

23இல் 17 படங்கள் புதிய இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன்: ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தான் நடித்த படங்களில் அதிகமாக புதிய இயக்குநர்களுடன் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். 

DIN

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பல அற்புதமான பாடல்களை இசையமைத்தவர் தற்போது நடிகராகவும் 24 படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கென பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட ஸ்டார் டா என்ற செயலி அறிமுக விழாவில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது: 

நான் சிறிய வயதிலிருந்தே சினிமாவில் பணியாற்றி வருகிறேன். என்னுடன் முதல்முறையாக பணியாற்றியவர்களே அதிகம். வெற்றிமாறன், அட்லி, ஏ.எல்.விஜய் உள்பட பலருடன் பணியாற்றியுள்ளேன். புதியதாக வருபவர்களுடன் பணியாற்றுவது மிகவும் பிடிக்கும். நான் நடித்த 23 படங்களில் 17 படங்கள் புதியதாக முதல்முறையாக இயக்குநராக அறிமுகமானவர்களே இருந்தார்கள். புதிய நடிகைகள், பாடகர்கள் என பலருடன் பணியாற்றியுள்ளேன். 

குளிர்பானம், சூதாட்டம் போன்ற விளம்பரங்களில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளத்துடன் எனக்குப் பலமுறை அழைப்பு வந்தன. ஆனால், நான் அதையெல்லாம் மறுத்துவிட்டேன். விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் நடித்துள்ளேன். இப்போது திரைக் கலைஞர்களுக்கான வாய்ப்பை உருவாக்கும் செயலியை விளம்பரப்படுத்துகிறேன் எனக் கூறியுள்ளார். 

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி 25 படத்தை கமல் பிரகாஷ்  எழுதி, இயக்குகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT