முகப்பு
செய்திகள்

சொகுசு கார் வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சொகுசுக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Updated On : 17 பிப்ரவரி 2024, 4:45 pm IST
பகிர்:

மலையாளத்தில், ‘நஞ்சுகளூடே நாட்டில் ஓரிடவேள’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவராக படிப்பை முடித்தவர் ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்தார். முதல் படத்தில் பெரிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்ததாக இவர் நடித்த ‘மாயநதி’, ‘வரதன்’ ஆகிய படங்கள் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

தொடர்ந்து தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்பட பல படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா லட்சுமி. குறிப்பாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்த ‘பூங்குழலி’ கதாபாத்திரமே அவரின் பிரபலத்தை மேலும் விரிவாக்கியது. அதன் மூலமே தென்னிந்திய ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார். 

பூங்குழலி கதாபாத்திரம் தன் வாழ்க்கையில் பல கதவுகளைத் திறந்து விட்டதாக ஐஸ்வர்யா லட்சுமியே கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement

தற்போது, கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ரூ.1 கோடி மதிப்புள்ள ரேன்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தாண்டு இந்தியாவில் அறிமுகமான இந்த மாடல் காரை வாங்கிய முதல் மலையாள நடிகை இவர்தானாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.