செய்திகள்

ரஜினி - 171.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் லியோ - 2 மற்றும் ரஜினி - 171 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு லோகேஷ் கனகராஜ், “விஜய் அண்ணன் லியோவைவிட பெரிய பணி (அரசியல்) ஒன்றில் ஈடுபட உள்ளார். அதற்காக என் வாழ்த்துகள். அவர் விருப்பப்பட்டால் கண்டிப்பாக லியோ - 2 உருவாகும். தற்போது, தலைவர் - 171 படத்தின் திரைக்கதை பணிகளில் இருக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்படும். அதன்பின், இப்படத்தைப் பற்றி பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதனால், ரஜினி - 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் துவங்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

”பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்” - பகவந்த் மான்

ரவி ஒரு சகலகலா வல்லவன்! - சிவ ராஜ்குமார்

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!

SCROLL FOR NEXT