முகப்பு
செய்திகள்

அதிகரிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் காட்சிகள்!

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 12:21 PM
பகிர்:

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை.  இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், கேரளத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மஞ்சுமேல் பாய்ஸ் திரைக்காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வெளியான இரண்டு நாள்களில் இப்படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.