செய்திகள்

100 நாள்களைக் கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் -2

கடந்த வாரம் 5.96 புள்ளிகளுடன் டிஆர்பி பட்டியலில் 11வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 உள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வெற்றிகரமாக 100 நாள்களைக் கடந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திற்கு 5 ஆண்டுகளாகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 30 முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை வைத்து கதை நகர்ந்தது. இரண்டாவது பாகத்தில் அப்பா - மகன்கள் இடையேயான உறவு சிக்கல்கள் குறித்து கதை நகர்கிறது.

முதல் சீசனில் மூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்டாலின் முத்து தவிர மற்ற யாருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் இல்லை. நாயகியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் மகன்களாக நடிக்கின்றனர்.

பிரியா தம்பி திரைக்கதை, வசனம் எழுத வி.சி. ரவி பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரை இயக்குகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குறிப்பிடத்தகுந்த டிஆர்பி புள்ளிகளையும் பெறுகிறது. கடந்த வாரம் 5.96 புள்ளிகளுடன் டிஆர்பி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி பெறும் 4வது தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT