செய்திகள்

இயக்குநர் பாலா என்னை அடித்தார்: மமிதா பைஜூ

பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜூ இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகக் கூறியுள்ளார்.

DIN

நஸ்லன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சூப்பர் சரண்யாவில் அசத்திய மமிதா பைஜூ பிரேமலுவில் அட்டகாசம் செய்துள்ளார். இதனால், தென்னிந்திய சினிமாவில் கவனிக்கும் நடிகையாக உருவாகியுள்ளார் மமிதா.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, “வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, இயக்குநர் பாலா ‘வில்லடிச்சா மாடன்’ என்கிற பாடலுக்காக வாத்தியம் ஒன்றை வாசித்தபடி ஆடச் சொன்னார். ஆனால், நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. அதனால், சில டேக்குகள் எடுத்தேன். இதனால், கோபப்பட்ட பாலா என் முதுகில் அடித்தார். அதன்பின், அப்படத்திலிருந்து நான் விலகிக்கொண்டேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பாலாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பரதேசி படப்பிடிப்பில் பாலா நடிகர்களிடம் வன்முறையாக நடந்துகொண்ட விடியோவுடன் மமிதா பேசியதை இணைத்து விடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.

இதனையடுத்து அருண்விஜய் நடித்து திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT