முகப்பு
செய்திகள்

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில்!

நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்திகள்

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில்!

நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

அவர் நடித்த ‘சந்திரமுகி - 2’ திரைப்படம் பெரிதாக கவனம் பெறவில்லை.   மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை இனி நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக,  நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பெயர் விரைவில் அறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னன் படத்திற்குப் பின் ஃபகத் ஃபாசில் - வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →