செய்திகள்

தெலுங்கு நடிகர்கள் எனக்கு வாய்ப்பு வழங்குவதில்லை: புலம்பும் இசையமைப்பாளர் மணி சர்மா!

இசையமைப்பாளர் மணி சர்மா பிரபல தெலுங்கு நடிகர்கள் தனக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

தமிழ், தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் மணி சர்மா. தமிழில் 25 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தெலுங்கில் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னடம், ஹிந்தி என மொத்தமாக இதுவரை 200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவருக்கு தற்போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

தமிழில் போக்கிரி, யூத், திருப்பாச்சி, மலைகோட்டை, மாப்பிள்ளை என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ் பாபு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் மணி சர்மா, “மகேஷ் பாபு எனக்கு சகோதரர் மாதிரி; ஆனால் தற்போது என்னுடன் அமர்ந்து 2 பெக் அடிக்கக்கூட முடிவதில்லை. அவருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தும் என்னை கண்டுக்கொள்வதில்லை. பவன் கல்யாணுடனும் எனக்கு நெருக்கம் அதிகம். அவருக்கு இசையமைக்கும்போது எனது ஸ்டூடியோவில் படுத்துக்கொண்டு புத்தகம் படிப்பார். ஆனால் அவரை சந்தித்தும் சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  

பவன் கல்யாண், மகேஷ் பாபு அவர்களுக்கு தங்கள் படங்களுக்கு யார் இசையமைக்கலாம் என்ற அதிகாரம் இருக்க்கிறது. இருந்தும் அவர் சம வாய்ப்பினை தருவதில்லை. தமன், தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு மட்டுமே வாய்ப்பளிக்காமல் எனக்கும் சம வாய்ப்பினை அளித்தால் மக்களுக்கு நல்ல பாடல்கள் கிடைக்கும். 

சில பாடல்கள் காப்பியடிக்க காரணம் படக்குழு மட்டுமே. யாருக்குதான் இன்னொருவரது பாடலை காப்பியடிக்க பிடிக்கும்: எனக் கூறியுள்ளார். 

இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மெலோடி பிரம்மா என மணி சர்மாவை ரசிகர்கள் புகழ்வதும் குறிப்பிடத்தக்கது. 

தமன், தேவி ஸ்ரீ, ஹாரிஷ் ஜெயராஜ் ஆகியோர்கள் ஆரம்ப நாள்களில் மணி சர்மாவுக்கு கீழ் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொம்புசீவி டீசர்!

உத்தரகண்ட்டில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து!

பிரதமர் மோடியை சந்தித்து பரிசளித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்!

மே.இ.தீவுகள் பயிற்சியாளர், கேப்டனிடம் தனித்தனியாக பேசிய பிரையன் லாரா!

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

SCROLL FOR NEXT