செய்திகள்

ஈரமான ரோஜாவே நினைவிருக்கா? நீண்ட நாள்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பு!

ஈரமான ரோஜாவே -2 தொடரில் நடித்த நடிகர்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்துள்ளனர். 

DIN

ஈரமான ரோஜாவே -2 தொடரில் நடித்த நடிகர்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்துள்ளனர். 

ஈரமான ரோஜாவே தொடர் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதில் முதன்மை பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். 

சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் குழு மீண்டும் இணைந்து புதிய தொடரில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

ஸ்வாதி - கெபிரியல்லா

ஈரமான ரோஜாவே தொடரில் திரவியம் ராஜகுமரன் - ஸ்வாதி, சித்தார்த் - கெபிரியல்லா ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் காட்சிகளும் செல்லமாக நடக்கும் சண்டைக் காட்சிகளும் இன்றளவும் சமூக வலைதளங்களில் விடியோக்களாக வலம்வருகின்றன. அந்த அளவுக்கு ஈரமான ரோஜாவே தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சித்தார்த் - கெபிரியல்லா / திரவியம் ராஜகுமரன் - ஸ்வாதி

இந்தத் தொடர் கடந்த ஆண்டு இறுதியில் இறுதிக்கட்டத்தை எட்டியது. பெரும் வரவேற்புடன் நிறைவு செய்யப்பட்டது. இத்தொடரில் நடித்த ஸ்வாதி, தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஸ்வாதி

இந்நிலையில், ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஒன்றுகூடி சந்தித்துள்ளனர். நடிகர்கள் திரவியம், சித்தார்த், ஸ்வாதி , கெபிரியல்லா, ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் சந்தித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT