முகப்பு
செய்திகள்

எழில் கொஞ்சும் கடற்கரையில் பிரியங்கா சோப்ரா | படங்கள்

புத்தாண்டு கொண்டாட்டம் படங்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
பகிர்:

மெக்ஸிகோவில் புத்தாண்டைக் குடும்பத்துடன் வரவேற்ற பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அங்கு எடுத்த படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கணவர் மற்றும் மகளுடன் பிரியங்கா சோப்ரா

கணவர் நிக் ஜோனஸ், மகள் மால்தி மேரி மற்றும் தாயார் மது சோப்ரா உடன் மெக்ஸிகோவின் புகழ்பெற்ற கடற்கரை நகரங்களில் ஒன்றான கபோ சான் லூகாஸ் நகரத்தில் புத்தாண்டு விடுமுறை நாள்களைக் கழித்திருக்கிறார்.

மகளுடன் பிரியங்கா

“உங்களுக்கு நெருக்கமானவர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்ய முடிந்தால் நாம் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள்” எனத் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் குடும்பத்துடன்

மெக்ஸிகோவின் கடற்கரையும் அந்தி வேளையில் சூரியன் மறையும் காட்சியும் ரம்மியமானவை.

இணையர்களாக பிரியங்கா மற்றும் நிக்

அவர் தனது பதிவில், “அமைதி, ஓய்வு, குடும்பம், காதல், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் 2024 சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாயுடன் பிரியங்கா சோப்ரா

மகள், அம்மா, பாட்டி என தலைமுறைகளாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளார், பிரியங்கா சோப்ரா.

முழு கட்டுரையைப் படிக்க →