செய்திகள்

ஹனுமான் பட டிக்கெட் கட்டணத்தில் தலா ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதி!

ஹனுமான் பட டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதியாக வழங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

DIN

ஹனுமான் பட டிக்கெட் கட்டணத்தில் இருந்து தலா ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதியாக வழங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான்.   

தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் திரைப்படம் உலகளவில் வெளியாக உள்ளது. 

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-க்கு திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ஹனுமான் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்களில் இருந்தும் ரூ.5 ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்க இருப்பதாக ஹனுமான் படத்தின் ப்ரீ ரீலிஸ் விழாவில் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் ஹனுமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக படக்குழுவினர் அனைவரும்  காலணி அணியாமல் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

SCROLL FOR NEXT