செய்திகள்

கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது: ஜி.வி.பிரகாஷ்

கேப்டன் மில்லர் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

DIN

தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வருகிற 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில், “ பின்னணி இசையும் இசைக் கலப்பு (மிக்சிங்) பணியும் முடிந்தது. கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது. தனுஷுக்கான அறிமுக இசைக்குக் காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT