முகப்பு
செய்திகள்

வைரலாகும் விஜய்யின் தோற்றம்!

கோட் படத்திற்கான நடிகர் விஜய்யின் தோற்றம் வைரலாகி வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: கிரிக்கெட் விளையாடும் விஜய்: வைரல் விடியோ!

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - The Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் தன் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, தாடி மற்றும் மீசையை மழித்து இளமையாக இருக்கும் தோற்றத்தில் விஜய் இருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். தற்போது, இந்த விடியோ வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →