செய்திகள்

நாளை வெளியாகும் 4 தமிழ்ப் படங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜன.12) 4 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளது.

DIN

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜன.12) 4 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக வருகின்ற ஜன.13 முதல் 16 வரை 4 நாள்கள் நீண்ட விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி, 4 பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

அயலான்

ரவிக்குமாா் இயக்கத்தில் நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் நாளை வெளியாகவுள்ளது அயலான் திரைப்படம். இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிஷன் சேப்டர்-1

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மிஷன் சேப்டர்-1  அச்சம் என்பது இல்லையே’  திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT