பாடகர் ஜேசுதாஸ் தன் 84-வது பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டில் நேற்று (ஜன.10) எளிமையாகக் கொண்டாடினார். மலையாளம், தமிழ் மொழிகளில் மிகச்சிறந்த பாடகராக அறியப்படும் ஜேசுதாஸ், கேரளப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே மாறிய அளவிற்கு தன் குரலால் பல பாடல்களைப் பாடியவர்.
குறிப்பாக, ஹரிவராசனம். அய்யப்பனைக் குறித்து பாடப்பட்ட இப்பாடலை மதப்பாகுபாடின்றி அனைவரும் ரசிக்கின்றனர். காரணம், ஜேசுதாஸின் குரலிலேயே தெய்வீகம் இருப்பதாகத்தான் பல ரசிகர்களும் நினைக்கிறார்கள். நிறைய சாதனைகளைச் செய்தாலும் எப்போதும் ஜேசுதாஸைச் சுற்றி வரும் கேள்வி, அரசியலுக்கு வருவீர்களா? என்பதாகத்தான் இருக்கும்.
இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் அரசியல் குறித்த கேள்விக்கு ஜேசுதாஸ் பதிலளித்துள்ளார்.
அதில், “இப்போதும், நிறைய அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு வருகிறது. ஆனால், இளம் வயதிலேயே என் அப்பா என்னிடம் எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டார். என் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீற விருப்பமில்லை. ரசிகர் மன்றமாவது துவங்குங்கள் என கோரிக்கை எழுந்தது. அதையும் செய்யவில்லை. எந்த சமூக வலைதளத்திலும் எனக்கு கணக்குகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.