செய்திகள்

கணேஷ் வெங்கட்ராமனின் புதிய தொடர் ஒளிபரப்பு எப்போது?

நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் புதிய தொடர் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் புதிய தொடர் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். தொடர்ந்து, உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் போன்ற படங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார்.

சின்னத்திரைத் தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணன் என்பவரை கனேஷ் வெங்கட்ராமன் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

அவ்வபோது விளம்பர மாடலாமவும் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், நினைத்தேன் வந்தாய் தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கிறார்.

முன்னதாக தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்த கணேஷ் வெங்கட்ராமன், காதலை மையமாக கொண்டு எடுக்கப்படும் நினைத்தேன் வந்தாய் என்ற முழுநீள தொடரில் நடிக்கிறார்.

ஜி தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நினைத்தேன் வந்தாய் தொடரில் கதாநாயகனாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக  ஜாஸ்மீன், கீர்த்தனா நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த தொடர் வரும் ஜனவரி 22 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் ஆய்வு - பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்களிடம் விசாரணை

டி20 தொடர்: இந்திய அணியில் கில், பாண்டியா

ஓட்டுநா்களுக்கான கூடுதல் பணிச்சுமையால் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்குகின்றன -அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

சா்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் சுகாதாரக் கேடு -புகழூா் நகா்மன்றக் கூட்டத்தில் புகாா்

புகழூா் அரசு பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா

SCROLL FOR NEXT