முகப்பு
செய்திகள்

கார்த்தி - பிரேம் குமார் படத்தின் பெயர் இதுவா?

’96’  இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:18 PM
பகிர்:

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.

பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார்.

அப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே..காதலே’, ‘லைப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.

6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு  ‘மெய்யழகன்’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →