செய்திகள்

விடாமுயற்சி வெளியீடு எப்போது?

விடாமுயற்சி படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் விடாமுயற்சி கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இதையும் படிக்க: ஓடிடியில் சலார்!

விடாமுயற்சியின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளதை நெட்பிளிக்ஸ் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளான மே.1 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT