விரைவில் அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அங்கு 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்.
விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.
Advertisement
இதையும் படிக்க: நடிகை ஷகிலாவை தாக்கிய வளர்ப்பு மகள்!
பொங்கல் அன்று இப்படத்திற்கான அலுவலக பூஜை சென்னையில் நடந்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக, தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து இயக்குவதைத் தன்னிடம் கூறியதாகச் சொன்னார். இதனால், அஜித் - ஆதிக் கூட்டணி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாள்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.