செய்திகள்

விஜய் படம் என்னாச்சு? ஆர்.ஜே.பாலாஜி பதில்!

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி பதிலளித்துள்ளார். 

DIN

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி பதிலளித்துள்ளார்.  

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக வலம் வருகிறார். 

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’  இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜன.25) இந்தப் படம் வெளியாக உள்ளது. 

இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜி விஜய் உடனான படம் குறித்து பேசியுள்ளார். அதில், “வாரிசு, லியோ படங்களுக்கு முன்பாக நான் விஜய்யிடம் கதை கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. யோசித்து பிறகு பண்ணலாம். ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என விஜய் கூறினார். ஆனால் நான் எந்த ஏப்ரல் எனக் கேட்க மறந்துவிட்டேன். மேலும், எனக்கு அவருடன் பணியாற்ற மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. விஜய்க்கு கதை எழுத குறைந்தது 6 மாதம் ஆவது தேவைப்படும்” எனக் கூறினார். 

சமீபத்தில் அன்னபூரணி, அனிமல் படம் குறித்து பேசி இணையத்தில் வைரலானார் ஆர்.ஜே. பாலாஜி. தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

SCROLL FOR NEXT