செய்திகள்

பிரேமம் மறுவெளியீடு எப்போது தெரியுமா?

நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த பிரேமம் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

DIN

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பிரேமம் திரைப்படம் வெளியானது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். 

மலையாளத்தை விடவும் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்ற திரைப்படம் பிரேமம். சாய் பல்லவிக்கு இன்றும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் சிறப்பான ஒன்றாகவிருக்கிறது. 

ராஜேஷ் முருகேஷன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. பிரேமம் பட்டஹ்துக்கு பிறகு மலையாள சினிமாக்க்கு தமிழில் புதிய வணிகமே உருவாகியது எனும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பல வெற்றிப் படங்கள் ரீ-ரிலிஸ் செய்ய்ப்பட்டுவரும் நிலையில் பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது. அநேகமாக காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எஸ்.எஸ்.மீடியா இந்தப் படத்தினை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT