செய்திகள்

ஆபாச விடியோவை உருவாக்கியது ராஷ்மிகா ரசிகர்தான்!

நடிகை ராஷ்மிகா மந்தனா போலி சித்தரிப்பு விடியோவை வெளியிட்ட நபர் ராஷ்மிகாவின் ரசிகர் எனத் தெரிய வந்துள்ளது.

DIN

ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு (டீப்ஃபேக்) விடியோ அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தில்லி மகளிா் ஆணையம் அளித்த புகாரின்பேரில், தில்லி சிறப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

தொடர்ந்து, ஆந்திர மாநிலம் குண்டூரை சோ்ந்த ஈமனி நவீன் (23) என்ற பி.டெக் பட்டதாரி, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு விடியோவை வெளியிட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, சமூக வலைதளத்தில் தன்னைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராஷ்மிகா மந்தனாவை தவறாக சித்தரித்து விடியோ பதிவிட்டதாக தெரிவித்தாா்.

இதனால் பிரச்னை ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட விடியோவை சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நவீன் ராஷ்மிகாவுக்கான ரசிகர் பக்கத்தையும் (ஃபேன் பேஜ்) நடத்தி வந்ததுள்ளார். பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தன் விருப்ப நாயகியின் முகத்தையே போலியாக சித்திரித்து ராஷ்மிகாவின் ஆபாச விடியோவை அவரது  ரசிகரே உருவாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

SCROLL FOR NEXT