முகப்பு
செய்திகள்

வேலு நாச்சியாராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணியான வீரமங்கை வேலு நாச்சியாராக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
பகிர்:

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணியான வீரமங்கை வேலு நாச்சியாராக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராஜேஷ் எம். சிவா. இவர் தூங்காவனம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் வேடத்தில்  ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். சமீபத்தில் 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிக்க: தேசிங்கு ராஜா - 2 போஸ்டர்!

மேலும் வால்டர் வீரய்யா, வீரசிம்ஷா ரெட்டி உள்ளிட்ட தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.