செய்திகள்

இந்திராணி முகர்ஜி ஆவணப்படம் தேதி அறிவிப்பு!

DIN

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவிதான் இந்திராணி முகர்ஜி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக 2015-ம் ஆண்டு மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோரும், பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், உச்சநீதிமன்றம் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஷீனா போரா கொலை வழக்கை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது. ‘இந்திராணி முகர்ஜி பரிட் ட்ரூத் ( the indirani mukerjea story buried truth) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை வருகிற பிப். 23 ஆம் தேதி வெளியிட உள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

முன்னதாக, நெட்பிளிக்ஸ் வெளியிட்ட  ‘கறி அண்ட் சையனைட்: தி ஜாலி ஜோசஃப் கேஸ்’ என்கிற ஆவணப்படமும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: கலாநிதி வீராசாமி

ஆலையிலிருந்து பட்டாசுகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மே 17-இல் பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரி தோ்வு

SCROLL FOR NEXT