செய்திகள்

எமி ஜாக்சனுக்கு திருமணம்!

DIN

தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட சில படங்களில் நடித்தார்.

பின், மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய்யின் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தொடர்ந்து, எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான  எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இருவரும் இந்தியாவுக்கு இணைந்தே வந்தனர். இங்கு எமி ஜாக்சனின் படப்பிடிப்புகளிலும் அவர் குழந்தை ஆண்ட்ரியாஸூடன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில்,  எட் வெஸ்ட்விக் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்த எமி ஜாக்சன், அதற்கு ஒப்புக்கொண்டதையும் அறிவித்திருக்கிறார். இதன் மூலம், விரைவில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT