சுவதந்த்ரிய வீர் சாவர்கர் பட போஸ்டர் |ரந்தீப் ஹூடா எக்ஸ் தளப் பதிவு 
செய்திகள்

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் - சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு ‘சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

DIN

வலதுசாரி கொள்கைவாதியான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு ‘சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் ரந்தீப் ஹூடா ’சாவர்க்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வருகிற மார்ச 22-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குநர்  ரந்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.   

ஹைவே, சர்ப்ஜித், சுல்தான் ஆகிய படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரந்தீப் ஹூடா, இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநர் அவதரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது எக்ஸ்(டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இரு நாயகர்கள்; அவர்களில் ஒருவர் கொண்டாடப்பட்டார், மற்றொருவர் வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டார்.

2024-ஆம் ஆண்டு தியாகிகள் தினத்தன்று, வரலாறு திருப்பி எழுதப்படும். மார்ச் 22-ஆம் தேதியன்று சுவதந்த்ரிய வீர் சாவர்க்க்கர் திரையரங்குகளில் வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ”இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம் : தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவருக்கு செலுத்தும் அஞ்சலி இது” என்று ரந்தீப் ஹூடா பதிவிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை ஸீ-ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரந்தீப் ஹூடாவுடன் இணைந்து,  அங்கிதா லோகாண்டே மற்றும் அமித் சியால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT