செய்திகள்

'திருமகள்' நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு

திருமகள் தொடரில் நடித்த ஹரிகா சாதுவின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

திருமகள் தொடரில் நடித்த ஹரிகா சாதுவின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அதிலும் முக்கியத்துவமில்லா (Non-Prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்ளும் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

திருமகள் தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஹரிகா சாது. கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவந்த இந்த தொடர் கடந்தாண்டு நிறைவடைந்தது.

இதனிடையே, திருமகள் தொடர் நாயகி ஹரிகா சாது, சுந்தரி தொடரில் நடித்துவரும் அரவிஷ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், நடிகை ஹரிகா சாது புதிய தொடரொன்றில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ‘மணமகளே வா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மேலும், ‘மணமகளே வா’ தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT