நடிகர் சத்யராஜ் படம்: எக்ஸ்
செய்திகள்

புதிய தோற்றத்தில் சத்யராஜ்! எந்தப் படத்துக்காக?

புதிய தோற்றத்தில் இருக்கும் நடிகர் சத்யராஜின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

DIN

தமிழின் மூத்த நடிகர் சத்யராஜின் புதிய தோற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எந்தப் படத்துக்காக என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

நடிகர் சத்யராஜ் தற்போது நாயகனாக நடிக்காமல் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாகுபலி, லவ் டுடே என இவரது கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இந்நிலையில் தாடியுடன் கண்ணாடி அணிந்து தலைமுடியை முடித்து வைத்துள்ள புதிய தோற்றம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் சத்யராஜ்

இது ரஜினியின் கூலி படத்துக்காகவா அல்லது சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்காகவா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

1980-களில் ரஜினி - சத்யராஜ் இணைந்து பல படங்களில் நடித்தனர். குறிப்பாக, ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடித்து வந்தார். இருவரின் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

பல மேடைகளில் சத்யராஜ், மறைமுகமாக ரஜினியை தாக்கிப் பேசியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

சல்மானின் சிக்கந்தர் படத்தில் இணைந்ததாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT