செய்திகள்

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆவணப்படம்!

DIN

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி குறித்த ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது.

தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குநர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

2001 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்.1 என்கிற படத்தின் மூலம் இயக்குநராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமௌலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குநராக வெற்றி பெற்றார்.

இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமௌலியை சாதாரண இயக்குநராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ஈகா (நான் ஈ) திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமௌலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015 ஆம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் விஎஃப்எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன.

இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமௌலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமௌலியின் பங்களிப்பை கூறும் விதமாக, ”மாடர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இது, ராஜமௌலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிற்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT