அட்லி வெலியிட்ட போஸ்டர்.  
செய்திகள்

தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படம்: முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட அட்லி!

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. கடைசியாக தயாரித்த விஜய்யின் மெர்சல் (2017) திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023இல் தயாரித்த வல்லவனுக்கும் வல்லவன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

2018இல் ஆருத்ரா படத்தினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய பட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஜூலை 12ஆம் நாள் இதன் போஸ்டர் வெளியாகுமென அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் அட்லி இதனை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் நாயகனாக யூடியூபர் ஜம்ஸ்கட் புகழ் ஹரி பாஸ்கர் நடிக்கிறார். நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார். அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

அட்லி ஜவான் வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சல்மான்கான், அல்லு அர்ஜுன், விஜய் என பல பெயர்கள் இந்தப் பட்டியலில் அடிப்பட்டு வருகின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பாக எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT