செய்திகள்

காதலி, மனைவி பிடித்த மாதிரி அமைவதில்லை: இமான்

DIN

இசையமைப்பாளர் இமான் அளித்த நேர்காணல் கவனம் பெற்றுள்ளது.

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் தொடர்ந்து திரைப்படங்களுக்குப் பணியாற்றி வருகிறார். இவர் இசையமைப்பில் உருவான, டீன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இமான், “வாழ்க்கையில் ஆசைப்பட்ட எல்லாமும் கிடைப்பதில்லை. நமக்குப் பிடித்த தொழிலும் சரியாக அமைவதில்லை. பிடித்த காதலியும் பிடித்த மனைவியாக ஆவதில்லை. மனைவியும் பிடித்த காதலியாக இருப்பதில்லை.

நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளும் அமைவதில்லை. இப்படி, ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்று கிடைக்காமலே இருக்கிறது. ஆனால், எனக்கு ஆசைப்பட்ட விசயம் கிடைத்தது. ஒரு இசைக் கலைஞனாக இருந்தாலே போதும் என்றே நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக உள்ளேன். இதற்காக, எப்போதும் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

2008-ல் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார் இமான். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. மோனிகாவை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு மறுமணம் செய்துகொண்டார். இந்த விவகாரத்து பல சர்ச்சைகளைக் கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Kantara: Chapter 1 Review | நெருப்பில் குளிக்கும் தெய்வம்... | Dinamani Talkies | Rishab Shetty

காந்தாரா அழகி... சப்தமி கௌட!

பிளாக் இன் க்ரீன்! வினுஷா தேவி!

அழகிய தீயே... சமந்தா!

அக்.26 முதல்..! 5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை!

SCROLL FOR NEXT