எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் படம்: இன்ஸ்டா / ராகவா லாரன்ஸ்
செய்திகள்

மாற்றம் பயணத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, விக்ரம் 62 (வீர தீர சூரன்) படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தனுஷின் 50ஆவது படமான ராயனில் நடித்துமுடித்துள்ளார். இன்னும் பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா இன்று (ஜூலை 20) தனது 56ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

நடன இயக்குநரும் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அமைப்பை நிறுவி மக்களுக்கு உதவி செய்துவருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதை தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டா பதிவில் ராகவா லாரன்ஸ், “ எனது இனிய நண்பரும் சகோதருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு மிகவும் மிருதுவான மனம். என்னுடைய மாற்றம் பயணத்தில் இணைந்ததற்கு நன்றி.

நீங்கள் இயக்கும் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். உங்களுக்கு வெற்றியும் நல்ல உடல் நலத்தையும் தருமாறு ராகவேந்திரா சுவாமியை வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT