அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா 
செய்திகள்

அர்ஜுன் கபூர் - மலைக்கா அரோரா பிரிவு?

பிரபல பாலிவுட் ஜோடியான அர்ஜுன் கபூர் - மலைக்கா அரோரா இணை பிரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாலிவுட்டில் திருமணம் செய்துகொள்ளாத இணைகள் பலர் இருந்தாலும் நடிகர் அர்ஜுன் கபூர் - நடிகை மலைக்கா அரோரா ஜோடி மிகப்பிரபலம்.

காரணம், அர்ஜுன் கபூரைவிட மலைக்கா அரோரா 12 வயது மூத்தவர். தற்போது, 50 வயதாகும் மலைக்கா உடல் பேணலில் மிகுந்த கவனம் கொண்டவர். அன்றாடம் உடற்பயிற்சி, யோகா என இன்றும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் தோற்றத்திலேயே இருக்கிறார். அடிக்கடி, இணையத்தில் வைரலாவார்.

சமீபத்தில் மலைக்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் பிரிந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை மலைக்காவின் மேலாளர் மறுத்தார்.

இந்த நிலையில், அர்ஜுன் கபூர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வாழ்வில் நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. கடந்த காலத்தில் சிறைபட்டுக் கிடப்பது அல்லது எதிர்கால சாத்தியங்களைத் தேடிச்செல்வது” எனப் பதிவிட்டு அதை நீக்கியுள்ளார்.

தொடர்ந்து, தற்போது மலைக்கா அரோராவும் தன் இன்ஸ்டா பக்கத்தில், “உன்னால் இதைச் செய்ய முடியாது என பிறர் கூறினால், அதை இருமுறை செய்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா

ஏற்கனவே, நடிகர் அர்ஃபாஸ் கானை திருமணம் செய்து 2017-ல் விவாகரத்து பெற்ற மலைக்கா அரோரா, 2018-லிருந்து அர்ஜுன் கபூருடனான உறவை அதிகாரப்பூர்வமாகத் தொடர்ந்தார். தற்போது, இரண்டாம் முறையாக பிரிவு நிகழ்ந்துள்ளதைக் குறிப்பிடும் வகையில் இப்பதிவு இருப்பதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்.

இதனால், இருவரும் பிரிந்தது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT