செய்திகள்

மகளைப் பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: இளையராஜா

இன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள்.

DIN

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சமீபத்தில் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இன்று இளையராஜாவின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உள்பட உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’இளையராஜா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, “என் பிறந்தநாளுக்கு நீங்கள்தான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறீர்கள். ஆனால், என் மகளைப் பறிகொடுத்ததால் எனக்கு இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டாம் இல்லை. நன்றி” எனக் கூறியுள்ளார்.

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT