சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் மகளின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
எதிர்நீச்சல் தொடர் முடிந்த நிலையில், அத்தொடரில் நடித்த பலரும் திருச்செல்வம் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் தொடர் முடிந்ததால், இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் அனைவரும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர். மதுமிதா, ஹரிபிரியா, சத்யா தேவராஜன் ஆகியோர் தங்கள் சமூகவலைதளப் பக்கத்திலும் எதிர்நீச்சல் தொடர் உடனான நெருக்கத்தையும், அது முடிவடைந்து தாங்கள் பிரிவதால் ஏற்படும் துக்கத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரின் மொத்த குழுவும், திருச்செல்வம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குநர் திருச்செல்வத்தின் ஒரே மகள் பிரியவர்ஷினி. இவர் குஜராத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து அது சார்ந்த துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரியவர்ஷினியின் திருமணம் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் எதிர்நீச்சல் குழு உள்பட சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.