நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கும் 'சுந்தரி' நடிகை!
சுந்தரி தொடரில் நடித்துவரும் நடிகை ஸ்ரீ கோபிகா தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கவுள்ளார்.
சுந்தரி தொடரில் நடித்துவரும் நடிகை ஸ்ரீ கோபிகா தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிக்கவுள்ளார்.
நண்பராக இருந்து காதலராக மாறிய வியாசக் ரவியுடன் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை ஸ்ரீகோபிகா பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீ கோபிகா. தற்போது சுந்தரி தொடரின் 2ஆம் பாகத்திலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சன் தொலைக்காட்சியின் அன்பே வா தொடரிலும் நாயகியாக நடித்தார். நடிகை டெல்டா டேவிஸ் விலகிய பிறகு, கண்மணி பாத்திரத்தில் ஸ்ரீ கோபிகா நடித்து வந்தார். அந்தத் தொடர் வெற்றிகரமாக முடிந்தது.
அதோடு மட்டுமின்றி நடிகர் பிரபுதேவா உடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கி தற்போது வெள்ளித்திரையிலும் படங்களில் ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.
தனது பணியில் குறிப்பிடத்தகுந்த இலக்கை எட்டியதால், தற்போது தனது நீண்ட நாள் காதலரை ஸ்ரீ கோபிகா கரம்பிடிக்க உள்ளார். நீண்ட கால நண்பரான வியாசக் ரவி என்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
தற்போது அவருடன் நடந்த திருமண நிச்சய புகைப்படங்களை ஸ்ரீ கோபிகா பகிர்ந்துள்ளார். 2016 முதல் எனது சிறந்த நண்பனாக இருப்பவரை எனது வாழ்வின் காதலாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.