செய்திகள்

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்' வெளியீட்டுத் தேதி!

நடிகை அமலா பால் நடித்துள்ள லெவல் கிராஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

பின்னர், நண்பர் கேரள ஜகத் தேசாய் உடன் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான தி டீச்சர், போலா, ஆடு ஜீவிதம் படங்கள் நல்ல கவனம் பெற்றன. தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் லெவல் கிராஸ் படத்தில் நடித்துள்ளார். ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்தப் படத்தில்தான் நடிகை அமலா பால் பாடகியாகவும் முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT