செய்திகள்

கல்கி போஸ்டருடன் திஷா பதானியை பாராட்டிய சமந்தா!

பிரபல நடிகை சமந்தா கல்கி படத்தின் போஸ்டரை பகிர்ந்து திஷா பதானியை வாழ்த்தியுள்ளார்.

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

தற்போது ‘மா இண்டி பங்காரம்’ படத்தில் நடித்து வருகிறார். சக நடிகைகளை பாராட்டுவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் சமந்தாவுக்கு முதலிடம் என்றே சொல்லலாம்.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898ஏடி' திரப்படத்தின் டிரைலர் ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாஸுடன் கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை திஷா பதானியும் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளுக்கு படக்குழு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியது.

நடிகை சமந்தா இந்தப் போஸ்டரைப் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் மிகவும் கவர்ச்சிகரமான திஷா பதானி. உங்களது சண்டைக் காட்சிகளைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எப்படி முடிந்தது என தயவுசெய்து விளக்குங்கள்” என வியந்து பாராட்டியுள்ளார்.

திஷா பதானியின் உடல் கட்டமைப்பு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நடிகை சமந்தாவும் யசோதா படத்தில் சண்டைக் காட்சிகளில் கலக்கியிருப்பார். உடல் நலத்திலும் கவனம் செலுத்தும் சமந்தா, திஷா பதானியை பாராட்டுவது ஆரோக்கியமான விஷயமென்றே பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT