செய்திகள்

50-ஆவது படமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்: கீர்த்தி சுரேஷ் புகழாரம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மகாராஜா படத்தினை பாராட்டியுள்ளார்.

DIN

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இது விஜய் சேதுபதியின் 50ஆவது படமாகும்.

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மகாராஜா திரைப்படம் இன்று (ஜூன் 14) உலகம் முழுவதும் 1915க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:

மகாராஜா படத்தினைப் பார்த்து சுடச்சுட வெளியே வருகிறேன். அறிவார்ந்த திரைக்கதை. நித்திலன் நீங்கள்தான் படத்தின் நாயகன். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பெருமிதம். 50ஆவது படத்தினை குறிப்பிட இதுதான் சிறந்த வழி விஜய் சேதுபதி சார். உங்களை எப்போது திரையில் பார்த்தாலும் அது விருந்துதான்.

அனுராக் காய்ஷய் சார் தீயான நடிப்பு. நீண்ட நாள்களுக்குப் பிறகு அபிராமி மேடமை பார்ப்பது நன்றாக இருந்தது. மம்தா சேச்சிக்கு அதிக அன்புகள். பிலோமின் எடிட்டிங் அற்புதம். எங்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்தது.

இனி புர்ஜி டூ ஹாலிவுட்தான் நண்பா ஜகதீஷ். படக்குழுவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT